×

லைகா நிறுவனர் சுபாஷ்கரனின் பயோபிக்…விருப்பம் தெரிவித்த பிரபல இயக்குநர்கள்!

நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மணிரத்னம் , முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். லைகா நிறுவனர் சுபாஷ்கரன். தமிழ் சினிமாவில் 2.0, தர்பார், இந்தியன் 2 உள்ளிட்ட பல பிரம்மாண்ட படைப்புக்களை தயாரித்து ஒரு முன்னணி நிறுவனத்தின் அதிபராக வலம்வருகிறார். இந்நிலையில் சுபாஷ்கரனின் சமூகசேவையைப் பாராட்டி மலேசியப் பல்கலைக்கழகம் அவருக்கு ‘கலாநிதி’ கவுரவப் பட்டம் வழங்கியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மணிரத்னம் , முருகதாஸ் உள்ளிட்ட
 

நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில்  இயக்குநர்கள் மணிரத்னம் , முருகதாஸ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

லைகா நிறுவனர் சுபாஷ்கரன். தமிழ் சினிமாவில் 2.0, தர்பார், இந்தியன் 2  உள்ளிட்ட பல பிரம்மாண்ட படைப்புக்களை தயாரித்து ஒரு  முன்னணி  நிறுவனத்தின் அதிபராக வலம்வருகிறார். 

இந்நிலையில் சுபாஷ்கரனின்  சமூகசேவையைப் பாராட்டி  மலேசியப் பல்கலைக்கழகம் அவருக்கு ‘கலாநிதி’ கவுரவப் பட்டம் வழங்கியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில்  இயக்குநர்கள் மணிரத்னம் , முருகதாஸ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அப்போது  நிகழ்ச்சியில் பேசிய மணிரத்ன

ம், ‘சுபாஷ்கரனின் வளர்ச்சி அசாத்தியமற்றது. இதை நான் அவரிடம் கேட்டு வியந்திருக்கிறேன். ஒரு மனிதன் வாழ்க்கையில் உயர்வது பெரிதல்ல. உயர்ந்த பிறகு அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பது தான் முக்கியம். அவர் விருப்பப்பட்டால் அவரின் வாழ்க்கையை பயோகிராஃபியாக கூட எடுக்கலாம். அவர் அருகில் அமர்ந்திருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்’ என்றார்.  இதை தொடர்ந்த பேசிய முருகதாஸ், எனக்கு லைகா  குருதி அதிகம் தெரியாது. கத்தி படம் மூலம் தன அவரின் அறிமுகம் கிடைத்தது. சமீபத்தில் தர்பார் படத்துக்காக லண்டன்  சென்றேன். நம்மை 200 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த பிரிட்டிஷ் நாட்டில்  அவர்களை இவர் ஆளுமை செய்து வருகிறார். இவரிடம் அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். எனக்கு காலரை  தூக்கி  கொண்டு செல்லலாம் என்று தோன்றியது. அந்த அளவுக்கு பெருமையாக உள்ளது. இந்த விருதுக்கு முழு  தகுதியானவர் இவர்.  அவரின் வாழ்க்கையை பயோகிராஃபியாக எடுக்க நானும் விரும்புகிறேன். மணிரத்னம் முதல் பாகம் எடுத்தால் நான் இரண்டாம் பாகம் எடுக்கிறேன்’ என்றார். 

 

இதை  இதையடுத்து பேசிய லைகா நிறுவனர்  சுபாஷ்கரன், ‘நானும் தமிழன்தான், உங்களில் ஒருவன்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.