×

லைஃப் டைம் சாதனை செய்துள்ள விஸ்வாசம்: அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிரபல திரையரங்கம்!

விஸ்வாசம் திரைப்படம் லைஃப் டைம் சாதனை செய்துள்ளதாக பிரபல திரையரங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை: விஸ்வாசம் திரைப்படம் லைஃப் டைம் சாதனை செய்துள்ளதாக பிரபல திரையரங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வந்தனர்.குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை
 

விஸ்வாசம் திரைப்படம் லைஃப் டைம் சாதனை செய்துள்ளதாக பிரபல திரையரங்கம் அதிகாரபூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது

சென்னை: விஸ்வாசம் திரைப்படம் லைஃப் டைம் சாதனை செய்துள்ளதாக பிரபல திரையரங்கம் அதிகாரபூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வந்தனர்.குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. படம் வெளியாகி 15நாள் கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு வருகிறது. மேலும் விஸ்வாசம் திரைப்படம்  சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல திரையரங்க நிறுவனமான ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ஹைலைட் கிராசர் என்ற சிறப்பை பெற்றிருந்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.