×

லீக் செய்தும் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்: தமிழ் ராக்கர்ஸ்க்கு சாரி சொன்ன ரவுடி ஹீரோ!

‘டாக்ஸிவாலா’ திரைப்படம் திருட்டுத்தனமாக லீக்காகியும், ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது, எங்களிடம் மோதாதீர்கள் என நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழ் ராக்கர்ஸிடம் சவால் விட்டுள்ளார். ஹைதராபாத்: ‘டாக்ஸிவாலா’ திரைப்படம் திருட்டுத்தனமாக லீக்காகியும், ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது, எங்களிடம் மோதாதீர்கள் என நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழ் ராக்கர்ஸிடம் சவால் விட்டுள்ளார். தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா நடித்த ‘டாக்ஸிவாலா’ திரைப்படம் கடந்த நவ.17ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இப்படத்தின் திரையரங்க ரிலீசுக்கு முன்பே தமிழ்
 

‘டாக்ஸிவாலா’ திரைப்படம் திருட்டுத்தனமாக லீக்காகியும், ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது, எங்களிடம் மோதாதீர்கள் என நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழ் ராக்கர்ஸிடம் சவால் விட்டுள்ளார்.

ஹைதராபாத்: ‘டாக்ஸிவாலா’ திரைப்படம் திருட்டுத்தனமாக லீக்காகியும், ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது, எங்களிடம் மோதாதீர்கள் என நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழ் ராக்கர்ஸிடம் சவால் விட்டுள்ளார்.

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரகொண்டா நடித்த ‘டாக்ஸிவாலா’ திரைப்படம் கடந்த நவ.17ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இப்படத்தின் திரையரங்க ரிலீசுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக படத்தை வெளியிட்டது. இது ‘டாக்ஸிவாலா’ படக்குழுவினர் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எனினும், திட்டமிட்டபடி, நவ.17ம் தேதி ரிலீசான இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை கடந்த நவ.23ம் தேதி ஹைதராபாத்தில் ‘டாக்ஸிவாலா’ படக்குழுவினர் கொண்டாடினர். அதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, தனக்கே உரிய கெத்து ஸ்டைலில் தமிழ் ராக்கர்ஸை விளாசியுள்ளார்.

அவர் பேசுகையில், ‘நான் திரும்பி வருவேன் என்று சொன்னால் நிச்சயமாக வருவேன். எங்கள் படத்தை இணையத்தில் கசியவிட்ட ராக்கர்ஸ், ரூலர்ஸ் எல்லோரும் மன்னித்துவிடுங்கள். எங்களுடன் மோதாதீர்கள். நீங்கள் லீக் செய்தும்கூட படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது’ என்றார்.

திரைப்படங்கள் ரிலீசாவதில் இருக்கும் சிக்கல் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, ‘டாக்ஸிவாலா’ திருட்டுத்தனமாக இணையதளத்தில் லீக்கான போது ஆதரவாக இருந்த திரை பிரபலங்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.