×

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தை கைப்பற்றிய ‘தளபதி 63’ தயாரிப்பாளர்

லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது. மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’. இதில் பசங்க படப்புகழ் கிஷோர், லவ்லி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக
 

லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் வெளியீட்டு உரிமையை பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றுள்ளது.

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  ‘ஹவுஸ் ஓனர்’. இதில் பசங்க படப்புகழ் கிஷோர், லவ்லி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில், படம் வருகிற ஜூன் 21-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘ஹவுஸ் ஓனர்’ படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் கொண்டிருக்கிறது. எளிய மற்றும் எதார்த்தமான படமான இதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நான் நம்புகிறேன். இந்த பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பது, பெரிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு பெயர் போன ஏஜிஎஸ், எங்களை போன்ற சிறிய பட்ஜெட்டில் உருவான படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.

 

மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ எ படத்தை  தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.