×

ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த ‘கீதா கோவிந்தம்’: நன்றி சொன்ன அர்ஜுன் ரெட்டி!

சென்னை: அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலில் இணைந்துள்ளது. கடந்த வாரம் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் ’அர்ஜுன் ரெட்டி’ படத்தையும் தாண்டி ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. தெலுங்கு மட்டுமின்றி பிற தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் ரூ.100 கோடி வசூலில் இணைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.5 கோடி வசூலித்துள்ளது. The boys played
 

சென்னை: அர்ஜுன் ரெட்டி நாயகன் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலில் இணைந்துள்ளது.

கடந்த வாரம் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் ’அர்ஜுன் ரெட்டி’ படத்தையும் தாண்டி ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. தெலுங்கு மட்டுமின்றி பிற தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் ரூ.100 கோடி வசூலில் இணைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.5 கோடி வசூலித்துள்ளது.

இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களுக்கு நன்றி என கூறி ட்வீட்டியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘இன்கேம் இன்கேம்’ பாடல் ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.