×

‘ராட்சசி’ படத்தை தடை செய்யவேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

நடிகை ஜோதிகா புதுமுக இயக்குநரான கெளதம்ராஜ் இயக்கியுள்ள ‘ராட்சசி’ என்ற படத்தில் நடித்துள்ளார் சென்னை: ராட்சசி பட இயக்குநர் கௌதமராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகை ஜோதிகா புதுமுக இயக்குநரான கெளதம்ராஜ் இயக்கியுள்ள ‘ராட்சசி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் சார்பில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி நல்ல
 

நடிகை  ஜோதிகா  புதுமுக இயக்குநரான கெளதம்ராஜ் இயக்கியுள்ள ‘ராட்சசி’ என்ற படத்தில் நடித்துள்ளார்

சென்னை: ராட்சசி  பட இயக்குநர் கௌதமராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை  ஜோதிகா  புதுமுக இயக்குநரான கெளதம்ராஜ் இயக்கியுள்ள ‘ராட்சசி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இதில் சார்பில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளின் நிலையைக் குறிப்பிட்டுக்காட்டும் விதமாகப் படமாக்கப்பட்டிருந்தது.  ஆனால்  இந்த படத்தில் அரசுப்பள்ளியினை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் விதமாக உள்ளதாகத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில் ராட்சசி திரைப்படம் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ‘ராட்சசி திரைப்படத்தில் அரசுப்பள்ளியினை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும் அரசுப்பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் விதமாக உள்ளது. அரசுப்பள்ளி எங்கும் குப்பை. இந்த வாத்தியார்களால் தான் நாடே கெட்டுப்போச்சு போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் ராட்சசி படத்தைத் தடை செய்ய வேண்டும்.  மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவும்,   இயக்குநர் கௌதமராஜ், வசனம் எழுதிய பாரதிதம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்’ என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.