×

ராஜமவுலிக்கு வந்த சோதனை: ராம் சரணை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கு வந்த ஆபத்து?!

ராஜமவுலியின் படப்பிடிப்பின் போது ராம் சரணைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ராஜமவுலியின் படப்பிடிப்பின் போது ராம் சரணைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி வசூலைக் குவித்தது. பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம், சுமார் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. ஆனால்
 

ராஜமவுலியின் படப்பிடிப்பின் போது ராம் சரணைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

ராஜமவுலியின் படப்பிடிப்பின் போது ராம் சரணைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான  ‘பாகுபலி’ திரைப்படம் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி வசூலைக் குவித்தது. பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம், சுமார் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. ஆனால் பாகுபலி இந்தியாவைத் தாண்டி  உலகளவில் சாதனை படைத்தது.

இதனால் உலக அளவில் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் அவர்,  தற்போது ‘ஆர் ஆர் ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படமானது விடுதலைப் போராட்ட வீரர்களான  அல்லூரி  சித்தராம ராஜு  மற்றும் கோமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தெலுங்கு ரசிகர்களின் மனதை வென்ற நாயகர்களான  ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளனர். ஆர் ஆர் ஆர்  படப்பிடிப்பு புனேவில் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால்  அதற்கு முந்தைய நாள், ராம் சரணுக்கு காயம் ஏற்பட்டது. 

இந்நிலையில்  ஜூனியர் என்.டி.ஆர். சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கப் படக்குழு முடிவெடுத்தது. அதன்படி ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், படப்பிடிப்பில் தற்போது ஜூனியர் என்.டி.ஆரின் கையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

முன்னதாக இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான டெய்சி எட்கர் ஜோன்ஸ் எனும் பிரிட்டிஷ் நடிகை அப்படத்திலிருந்து சமீபத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.