×

ரஜினியுடன்- ஏ.ஆர்.முருகதாஸ் குடும்பத்தினர்! வைரலாகும் புகைப்படம் 

தர்பார்’ படப்பிடிப்பிலிருந்து மீண்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. சென்னை: ‘தர்பார்’ படப்பிடிப்பிலிருந்து மீண்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தர்பார்’. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கிய ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் உள்ள புகழ் பெற்ற சேவியர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

தர்பார்’ படப்பிடிப்பிலிருந்து மீண்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சென்னை: ‘தர்பார்’ படப்பிடிப்பிலிருந்து மீண்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தர்பார்’. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கிய ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் உள்ள புகழ் பெற்ற சேவியர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

மேலும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இம்முறையும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மனைவியும் அவரது மகளும் ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.