ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் சினிமாவில் மாற்றத்தை கொண்டு வந்த எதார்த்த இயக்குனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார். ஜானி, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை ஆகிய ரஜினி படங்களை இயக்கியவர் மகேந்திரன். தமிழ் சினிமாவில் மாற்றத்தை கொண்டு வந்த எதார்த்த இயக்குனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த மகேந்திரன், அட்லீ இயக்கிய ‘தெறி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு நிமிர், பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்நிலையில்
Mar 27, 2019, 18:18 IST
தமிழ் சினிமாவில் மாற்றத்தை கொண்டு வந்த எதார்த்த இயக்குனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்.
ஜானி, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை ஆகிய ரஜினி படங்களை இயக்கியவர் மகேந்திரன். தமிழ் சினிமாவில் மாற்றத்தை கொண்டு வந்த எதார்த்த இயக்குனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த மகேந்திரன், அட்லீ இயக்கிய ‘தெறி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு நிமிர், பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்நிலையில் அவர் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் வாடிக் கொண்டிருந்த மகேந்திரன் உடல்நிலை சற்று மோசமாகியுள்ளது. அவரை ஐசியூவில் அனுமதித்துள்ளனர்.