×

ரஜினிக்கு முன்பே தனுஷ் அரசியல் கட்சி துவங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை…பிரபல இயக்குநர் சூசகம்…

மாமனார் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே மருமகன் தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பிரபல இயக்குநரும் தனுஷின் அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவருமான சுப்ரமணிய சிவா கூறியுள்ளார். மாமனார் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே மருமகன் தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பிரபல இயக்குநரும் தனுஷின் அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவருமான சுப்ரமணிய சிவா கூறியுள்ளார். சிவாவின் இயக்கத்தில் சமுத்திரக்கனி கதைநாயகனாக நடித்திருக்கும்’வெள்ளை யானை’படத்தை சமீபத்தில் தனுஷ் பார்த்து அவரைக் கட்டித்
 

மாமனார் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே மருமகன் தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பிரபல இயக்குநரும் தனுஷின் அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவருமான சுப்ரமணிய சிவா கூறியுள்ளார்.

மாமனார் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே மருமகன் தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பிரபல இயக்குநரும் தனுஷின் அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவருமான சுப்ரமணிய சிவா கூறியுள்ளார்.

சிவாவின் இயக்கத்தில் சமுத்திரக்கனி கதைநாயகனாக நடித்திருக்கும்’வெள்ளை யானை’படத்தை சமீபத்தில் தனுஷ் பார்த்து அவரைக் கட்டித் தழுவிப் பாராட்டியிருக்கிறார்.’விவசாயத்தின் அருமை பெருமைகளைப் பேசுற இந்தப் படத்தை ஒவ்வொரு தமிழனையும் பார்க்கவைக்க என்னால என்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்யுறேன் அண்ணா’ என்று பாராட்டினாராம்.

அடுத்து தனுஷ் ரசிகர் மன்றத்தில் அடிக்கடி நடக்கும் கலவரங்கள் கோஷ்டி மோதல்கள் குறித்துப் பேசிய சிவா,’மன்றம் என்று வரும்போது எல்லோரையுமே திருப்திபடுத்த முடியாது. தொடர்ந்து பிர்ச்சினைகள் செய்து வருபவர்கள் வெளிப்படையாக தங்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மறுக்கிறார்கள். மன்ற நடவடிக்கைகளை மீற் செய்லபட நினைப்பவர்களைக் கட்டுப்படுத்த முயலும்போது குழப்பங்களை விளைவித்து சாமர்த்தியமாகத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்’என்கிறார்.

அடுத்து மிகவிரைவில் தனுஷ் ரசிகர் மன்றத்தை அரசியல்கட்சியாக மாற்றப்போகிறாராமே என்று கேட்டால் கொஞ்சமும் அதிர்ச்சி அடையாமல் இங்கே எல்லாவிதமான நகர்வுகளுக்கும் சாத்தியம் உண்டு’என்று நச்சென்று பதிலளிக்கிறார். அண்ணன் சொல்றதைப்பாத்தா மாமனாருக்கு முந்தியே மருமகன் அரசியலுக்கு வந்துடுவார் போலருக்கே.