×

ரஜினிக்கு போர் அடித்தால் பார்க்கும் படங்கள் இதுதானாம்!

கே.பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, இயக்குநர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரமேஷ் அரவிந்த், நாசர், பூஜா குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கமலின் 60 ஆண்டு திரைப்பயணம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அத்துடன், ரஜினி -கமல் இருவரின் குருநாதரான மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் மார்பளவு கொண்ட திருவுருவ சிலையை ரஜினி – கமல் இருவரும் ஒன்றாக இணைந்து திறந்து வைத்தனர்.
 

கே.பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, இயக்குநர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரமேஷ் அரவிந்த், நாசர், பூஜா குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கமலின் 60 ஆண்டு திரைப்பயணம்  கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அத்துடன், ரஜினி -கமல் இருவரின்  குருநாதரான மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் மார்பளவு கொண்ட திருவுருவ சிலையை ரஜினி – கமல் இருவரும் ஒன்றாக இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் கே.பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, இயக்குநர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகர் ரமேஷ் அரவிந்த், நாசர், பூஜா குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அப்போது விழாவில் பேசிய ரஜினி, ‘கமலின் கலையுலக தந்தை, என்னுடைய குரு கே.பாலசந்தர் சிலையை கமல் அவரது அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார். இதை வார்த்தைகளால் கூற முடியாது. அவர் நம்முடன் இல்லை. இருந்தாலும் அவரின் நினைவுகள் என் கண்முன்னே வந்து செல்கிறது. தமிழ் மட்டும் கற்றுக் கொள். நான் உன்னை எங்கு கொண்டுபோய் உட்கார வைக்கிறேன் என்று பார் என்று கூறினார். அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை கமல். அவர் கமலை தூரத்திலிருந்து ரசிப்பார்.

கமல் அரசியலுக்கு வந்தாலும் கூட தாய் வீடான சினிமாவை விட்டுவிட மாட்டார். கலை அவரது உயிர். ராஜ்கமல் தயாரிப்பில் உருவான அபூர்வ சகோதரர்கள் படத்தை இரவு 2 மணிக்கு பார்த்து முடித்தேன். மறுநாள் காலை கமலை சந்தித்து வாழ்த்தினேன். தேவர் மகன் திரைப்படம் ஒரு காவியம். எனக்கு போர் அடித்தால் அடிக்கடி காட்பாதர், திருவிளையாடல், ஹேராம் படங்களை பார்ப்பேன். இதுவரை ஹேராம் படத்தை 30, 40 முறை பார்த்திருப்பேன்’ என்றார்.