×

ரஜினிகாந்த் அமரும் ‘நாற்காலி’?: ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த அரசியல் படம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படும் படத்திற்கு ‘நாற்காலி’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படும் படத்திற்கு ‘நாற்காலி’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை ‘சர்கார்’ இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அரசியல் படமாக இருக்காது என்றும், ஃபேன்டஸி திரைப்படமாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பில் கூறப்பட்டது. தற்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை
 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படும் படத்திற்கு ‘நாற்காலி’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படும் படத்திற்கு ‘நாற்காலி’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பேட்ட’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தை ‘சர்கார்’ இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அரசியல் படமாக இருக்காது என்றும், ஃபேன்டஸி திரைப்படமாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பில் கூறப்பட்டது.

தற்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்தும் விதமாக ’நாற்காலி’ என படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் படமாக இருக்கும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது பிறந்தநாளான டிச.12ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘நாற்காலி’ படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 166 படமான ‘நாற்காலி’ திரைப்படம் தான் அவர் நடிக்கும் கடைசி திரைப்படம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.