×

ரஜினி இன்னும் உலகளாவிய விருதுகளை பெற வேண்டும் : வாழ்த்து தெரிவித்த வைகோ..!

கலையுலகமே கொண்டாடும் உங்களுக்கு இந்த விருதினை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிக்கு திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதற்காக ‘ICON OF GOLDEN JUBILEE’ என்னும் விருதை வழங்கப் போவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார். இந்த விருது, கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை, 8 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
 

கலையுலகமே கொண்டாடும் உங்களுக்கு இந்த விருதினை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு.

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிக்கு திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதற்காக ‘ICON OF GOLDEN JUBILEE’ என்னும் விருதை வழங்கப் போவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார்.

இந்த விருது, கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை, 8 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. நடிகர் ரஜினி பெறப் போகும் இந்த விருதிற்காகப் பல தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ‘

மதிமுக கட்சியின் தலைவர் வைகோ இன்று நடிகர் ரஜினிக்கு செல்போன் மூலம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில், ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை நீங்கள் பெற்றது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. கலையுலகமே கொண்டாடும் உங்களுக்கு இந்த விருதினை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. நீங்கள் மேன்மேலும் சாதனை படைத்து உலகளாவிய விருதுகளைப் பெற வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். அதற்கு நடிகர் ரஜினி ‘தங்களது வாழ்த்துக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.