யுவன் இசையில் இளையராஜா… உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு, ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.
கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸான ஒரு விஷயத்தைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘படத்தில் அப்பா பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. இந்த பாடலை பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருந்தது’ என்று குறிப்பிட்டு பா. விஜய்- இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இப்படம் 20-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. .