×

யார் இந்த சுட்டிக் குழந்தை? வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். பிரபல நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். கேரளாவைச் சேர்ந்த இவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அசின், ‘கஜினி’ திரைப்படத்தின்
 

பிரபல நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகை அசின் தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். கேரளாவைச் சேர்ந்த இவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அசின், ‘கஜினி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் அதிக சம்பளம் வாங்கு நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா மீது காதல் வயப்பட்ட அசின், கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி.19ம் தேதி ராகுலை திருமணம் செய்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2017, ஆண்டு அக்.24ம் தேதி அசினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தையின் முதல் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை அசின் மற்றும் ராகுல் ஷர்மா தம்பதி வெளியிட்டுள்ளனர். ’அரின்’ என்று பெயரிடப்பட்டுள்ள அசின் குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.