×

மோகன் லாலுடன் இணையும் ஜாக்கிசான்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் ஒரு படத்தில் ஜாக்கி சான் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் ஒரு படத்தில் ஜாக்கி சான் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கிசானின் நடிப்புக்கும் அவரது சண்டை காட்சிக்கும் மயங்காதவர் எவரும் இல்லை. இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவருகிறார். இந்நிலையில் மலையாள சினிமா லெஜண்ட் மோகன்லால் உடன் ஜாக்கி சான் இணைந்தி
 

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் ஒரு படத்தில் ஜாக்கி சான் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் ஒரு படத்தில் ஜாக்கி சான் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கிசானின் நடிப்புக்கும் அவரது சண்டை காட்சிக்கும் மயங்காதவர் எவரும் இல்லை. இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவருகிறார். இந்நிலையில் மலையாள சினிமா லெஜண்ட் மோகன்லால் உடன் ஜாக்கி சான் இணைந்தி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு நாயர் சன் என பெயரிடப்பட்டிருப்பதாகவும், இந்த படத்தை இயக்குநர் ஆல்பர்ட் ஆண்டனி இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த மாத இறுதியில் நாயர் சன் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. மோகன் லால் இந்த படத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் மலையாள திரையுலகம் கிசுகிசுக்கிறது. ஆனால் இந்த படத்தை தயாரிக்கவிருப்பது யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. தற்போது மோகன் லால் ஜித்து ஜோசப் இயக்கிவரும் ராம் படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.