×

மேடையில் மயங்கி விழுந்து பிரபல இளம் நடிகர் மரணம்… பதற வைக்கும் வீடியோ..!

பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல மாடல் ஒருவர் மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல மாடல் ஒருவர் மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள சா பாலோ நகரில் பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல ஆண் மாடலான டெலஸ் சோரெஸ் கலந்துக் கொண்டார். 26 வயதான இவர் பேஷன் ஷோவின் போது
 

பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல மாடல் ஒருவர் மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல மாடல் ஒருவர் மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் உள்ள சா பாலோ நகரில் பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல ஆண் மாடலான டெலஸ் சோரெஸ்  கலந்துக் கொண்டார். 26 வயதான இவர் பேஷன் ஷோவின் போது கேட்வாக் எனப்படும் பூனை நடை நடந்து விட்டு மேடையில் திரும்பினார். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக  அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதில் அவருடைய முகம் பகுதியில் பலத்த காயம் நேரிட்டது. ஆனால், அங்கிருந்த பார்வையாளர்கள் அது நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இருக்கும் என அப்படியே இருந்து விட்டனர். ஆனால், சுதாரித்துக் கொண்ட நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் ஓடோடிச் சென்று உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே  இறந்து விட்டாதாக கூறினர். டெலஸ் சோரெஸ்  சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பேஷன் விழா ஒன்றில் நடந்த இந்த சம்பவம் அங்கு அனைவரது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. https://youtu.be/s5_AkcL_O2Y