×

மேடையில் பாடிக்கொண்டிருந்த போதே உயிரிழந்த பிரபல பாடகர்: வைரல் வீடியோ!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். மங்களூர் : மேடையில் பாடிக்கொண்டிருந்தபோதே, பாடகர் ஒருவர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் பிரபல கொங்கனி இசை அமைப்பாளர் மற்றும் பாடகரான ஜெர்ரி பஜ்ஜோடி. இவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்து வருகிறார். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு மங்களூரில் உள்ள பேஜாய் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது மேடையில் உற்சாகமாகப் பாடல் கொண்டிருந்த அவர் எதிர்பாராத
 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார்.

மங்களூர் : மேடையில்  பாடிக்கொண்டிருந்தபோதே, பாடகர் ஒருவர் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் பிரபல கொங்கனி இசை அமைப்பாளர் மற்றும் பாடகரான  ஜெர்ரி பஜ்ஜோடி. இவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்து வருகிறார். அந்த வகையில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு மங்களூரில் உள்ள பேஜாய் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது மேடையில் உற்சாகமாகப் பாடல் கொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக மேடையில் சரிந்து விழுந்தார்.

 

இதனால் அங்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஜெர்ரியை மீது அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஜெர்ரி மேடையில் பாடியபடி சரிந்து விழும் வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.