×

‘முழு படமும் ஒரே ஷாட்டில்…’ பார்த்திபனின் அசர வைக்கும் அடுத்த முயற்சி!

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசுவதும் சரி அவர் எடுக்கும் படங்களும் சரி எப்போதும் சற்று வித்தியாசப்பட்டிருக்கும். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசுவதும் சரி அவர் எடுக்கும் படங்களும் சரி எப்போதும் சற்று வித்தியாசப்பட்டிருக்கும். இவரது சமீபத்திய படைப்பு ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் பார்த்திபன். இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும்
 

இயக்குநரும்  நடிகருமான பார்த்திபன் பேசுவதும் சரி அவர் எடுக்கும் படங்களும் சரி எப்போதும்  சற்று வித்தியாசப்பட்டிருக்கும்.

இயக்குநரும்  நடிகருமான பார்த்திபன் பேசுவதும் சரி அவர் எடுக்கும் படங்களும் சரி எப்போதும்  சற்று வித்தியாசப்பட்டிருக்கும். இவரது சமீபத்திய படைப்பு ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7.

ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை  இயக்கியுள்ளார் பார்த்திபன். இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பாராட்டினர்.

இந்நிலையில் இயக்குநர்  பாரதிராஜா பார்த்திபனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஒத்த செருப்பு திரைப்படத்தின் மூலம் தமிழக இயக்குநர் வரிசையிலிருந்து உலக இயக்குநர் வரிசைக்கு தன் உயரத்தை உயர்த்திக் கொண்ட என் பாசத்துக்குரிய பார்த்திபன்.. இனிய புத்தாண்டு இன்று தொடங்கும் ” இரவின் நிழல் ” உலக விருதுகள் பல வென்றெடுத்து தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்ப்பாய் என்றும் நிச்சயம் வாழ்த்துக்கள்.. இவன் கவிதைக்காக உங்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

குறிப்பாகப் பார்த்திபனின் அடுத்த முயற்சியாகப் படம் முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.