×

மும்பை பாடகருடன் அமலா பாலுக்கு நடந்த திடீர் திருமணம்… வைரல் போட்டோஸ்!

அமலாபால் பாடகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. ‘மைனா’ படத்தில் அறிமுகமான அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு கீரிடம், தெய்வ திருமகன், தேவி 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர். இதையடுத்து அமலாபால் மீண்டும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு
 

அமலாபால் பாடகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

‘மைனா’ படத்தில் அறிமுகமான அமலா பால்  கடந்த 2014 ஆம் ஆண்டு கீரிடம், தெய்வ திருமகன், தேவி 2  உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர்  ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே  விவாகரத்து பெற்றனர். இதையடுத்து  அமலாபால் மீண்டும்  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார். 

விவாகரத்தான பிறகு ஏ.எல் விஜய இயக்கத்திலும், அமலா பால் நடிப்பதிலும் முழு கவனம் செலுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு விஜய் பெற்றோரின் சம்மதத்துடன் ஐஸ்வர்யா என்ற பெண்ணை மணந்து கொண்டார்.

இதனிடையே அமலாபால் பாடகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால், அமலா பால் அவர் காதலிப்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. 
 

இந்நிலையில் அமலா பால் காதலர் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பாலுடன் திருமணம் செய்து கொண்ட போட்டோஸை வெளியிட்டார். அதற்கு பலரும் கமெண்ட் செய்ய, அவர் சில மணி நேரங்களிலேயே டெலிட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அமலா பாலும்  பாவ்னிந்தர் சிங்கும் சில மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் இன்று தான் திருமணம் நடந்தது போல புகைப்படத்தை வெளியிடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.