×

முக்கிய வழக்கில் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா எதிர்மனுதாரர்களாக சேர்ப்பு!

போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாக நடத்தக் கோரும் வழக்கில், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது சென்னை: போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாக நடத்தக் கோரும் வழக்கில், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஜான்சி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
 

போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாக நடத்தக் கோரும் வழக்கில், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

சென்னை: போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாக நடத்தக் கோரும் வழக்கில், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ஜான்சி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை. மேலும், அவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட வேண்டும். மக்களிடையே போலியோ குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்த வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போலியோ நோய் பாதிப்பு  இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளதை தனது மனுவில் சுட்டி காட்டியுள்ள அவர், இந்தியாவில் கடந்த 1995-ஆம் ஆண்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முறை தொடங்கப்பட்ட போதிலும், இதுவரை இன்னும் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் முறையாக தான் நடத்தப்பட்டு வருகின்றன. வருகிற 10-ம் தேதி கூட போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது என அரசு சார்பில் வாதிடப்பட்டது.

ஆனால், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது தொடர்பாக போதுமான விழிப்புணர்வு முகாம்களோ, விளம்பரங்களோ செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமான நடிகர்கள் மூலம் போலியோ விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் போது அது எளிதாக மக்களை சென்றடையும் எனவும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.