×

மீண்டும் பாய ரெடியாக எனை நோக்கி பாயும் தோட்டா!!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. ஒன்றாக என்டெர்டையின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் மூன்று ஆண்டுகளாகப்
 

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.  ஒன்றாக என்டெர்டையின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் மூன்று ஆண்டுகளாகப் படம் இன்னும் வெளியாகவில்லை.  ஏற்கனவே, இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு பிரச்சினைகள் காரணமாகப் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

 

 

தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் கூட்டணி அமைத்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு, செப்டம்பர் 6-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்தது. ஆனால் படம் வெளியாகாமல் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நவம்பர் 29-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.