×

மீண்டும் பழைய கெட்டப்புக்கு மாறிய அஜித்! வைரலாகும் வீடியோ!! 

கொஞ்ச நாள் பொறு தலைவா… அன ஆசைப் படத்தில் அரும்பு மீசையுடன் தொடங்கி, பின் அதிலிருந்து கொஞ்சம் டெவலப் ஆகி ட்ரிம் செய்த தாடியுடன் அமராவதியில் வலம் வந்து, பின் மங்காத்தா படத்திற்கு பின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கலக்கிவரும் அஜித் நேற்று வரை அதே லுக்கில் தான் பயணித்துவந்தார். ஆனால் இன்று அஜித் தன் கெட்டப்பை மாற்றி மீண்டும் பழைய கிளீன் ஷேவ், பிளாக் ஹேர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அஜித் விமான
 

கொஞ்ச நாள் பொறு தலைவா… அன ஆசைப் படத்தில் அரும்பு மீசையுடன்  தொடங்கி, பின் அதிலிருந்து கொஞ்சம் டெவலப் ஆகி ட்ரிம் செய்த தாடியுடன் அமராவதியில் வலம் வந்து, பின் மங்காத்தா படத்திற்கு பின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கலக்கிவரும் அஜித் நேற்று வரை அதே லுக்கில் தான் பயணித்துவந்தார்.

ஆனால் இன்று அஜித் தன் கெட்டப்பை மாற்றி மீண்டும் பழைய கிளீன் ஷேவ், பிளாக் ஹேர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். அஜித் விமான நிலையத்திலிருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

மங்காத்தா படம் எடுக்கும்போது பெப்பர் சால்ட் லுக் அஜித்திற்கு மவுசு கொடுக்குமா, ஹிட் ஆகுமா  என இயக்குநரிடையே பல கேள்விகள் எழுந்ததுண்டு, ஆனால் “மேன் ஆஃப் சிம்ளிசிட்டி” என்பது இதான் நான் என்பதை இன்றைய இளசுகளுக்கும், ரசிகர்களுக்கு புரியவைத்தவர் அஜித். 

 

 

வயசு 46. தலைமுடி நரைக்கத்தானே செய்யும். எதுக்கு மறைக்கணும்னு ஓபனாக வந்து மாஸ் என்ட்ரி கொடுத்த முதல் நடிகர் அஜித்தான் என்பதில் சந்தேகமே இல்லை…. 

இந்த போட்டோவை பார்த்த தல ரசிகர்கள் இதுதான் தலயின் 60 ஆவது படத்தின் நியூ லுக் என்று ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர். இதனால் இந்த புகைப்படங்கள் கசிந்த சில நிமிடங்களிலேயே #THALA60LatestPics மற்றும் #THALA60NewLook என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட்டாக தொடங்கியுள்ளன.