×

மீண்டும் துவங்குகிறது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு! எப்போ தெரியுமா? 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘இந்தியன்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படம் எடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்தை லைகா புரடக்ஷன் தயாரித்து வந்தது. இதில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு evp பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட்
 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

‘இந்தியன்’ படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படம் எடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வந்தது. இதில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

படத்தின் படப்பிடிப்பு evp பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்துத் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மேலும் அந்த செட்டின் வாடகை மட்டுமே ஒரு நாளிற்கு 2 லட்சம் வரை கொடுக்கப்படுக கூறப்படுகிறது.  தற்போது இந்தியன் 2 படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

ஆம் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1முதல் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்ததாகத் தகவல் வெளியானது. இது மட்டுமின்றி கமல் தலைவன் இருக்கிறான் படத்தின் படிப்பிப்பிற்கும் தேதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.