×

மீண்டும் சமீரா ரெட்டி வீட்டில் குவா குவா சத்தம்!  

நடிகை சமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை: நடிகை சமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும்
 

நடிகை சமீரா ரெட்டிக்கு  பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

சென்னை: நடிகை சமீரா ரெட்டிக்கு  பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.  அதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும்  மகாராஷ்டிராவைச் சேர்ந்த அக்ஷய் வர்தே என்கிற தொழில் அதிபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து சமீரா இரண்டாவது முறையாகக் கர்ப்பமாகியிருப்பதாக அறிவித்தார். கர்ப்பமாக இருக்கும் இவர் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியாகப் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சமீரா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  இன்று காலை அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக சமீராவின் அம்மா தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையை பெற்றெடுத்துள்ள சமீராவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.