×

மீண்டும் இணையத்தில் கசிந்த ரஜினியின் தர்பார் கெட்டப்!

தர்பார் படத்தில் மீண்டும் ரஜினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சென்னை: தர்பார் படத்தில் மீண்டும் ரஜினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வரும் ’தர்பார்’படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, ப்ரதீப் பாப்பர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். என்ன தான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரஜினிகாந்த்
 

தர்பார் படத்தில் மீண்டும்  ரஜினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

சென்னை: தர்பார் படத்தில் மீண்டும்  ரஜினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கி வரும் ’தர்பார்’படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, ப்ரதீப் பாப்பர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

என்ன தான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரஜினிகாந்த் அவ்வப்போது சென்னையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்காக வந்து செல்கிறார். அதிக பொருட்செலவில் லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில்யில் இருந்து  புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியடைவைத்துள்ளது. 

இந்நிலையில், ரஜினி போலீஸ் உடையணிந்து ஸ்டைலாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் மீண்டும் கசிந்துள்ளது. கண்ணாடி அணிந்து, காவல் உடையில், காரில் வந்து இறங்கி செல்வது போன்ற புகைப்படங்கள் லீக்காகியுள்ளது. தொடர்ந்து புகைப்படம் வெளியாகி கொண்டே இருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.