×

மிரள வைக்கும் தனுஷின் ’கர்ணன்’ ஸ்டில்ஸ்…வைரலாக்கும் ரசிகர்கள்!

தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்குக் கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மாரி செல்வராஜின் அடுத்த படைப்பில் நடிகர் தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்குக் கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும்
 

தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரிக்கிறார்.  மேலும் இப்படத்திற்குக் கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  

மாரி செல்வராஜின் அடுத்த படைப்பில் நடிகர் தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு படத்தைத் தயாரிக்கிறார்.  

மேலும் இப்படத்திற்குக் கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, மலையாள நடிகர் லால், கௌரி கிஷன்  உள்பட பலரும் இதில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு   வேகமாக நடந்து வந்த  நிலையில் படத்தின்  இரண்டாவது ஷெட்யூல் நிறைவடைந்துவிட்டது. அதன்படி படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது.

இந்நிலையில் கர்ணன் படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இதை கண்ட தனுஷ் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக்கி  வருகின்றனர்.