×

மித்தாலி ராஜ் பயோபிக்: தனுஷ் பட நாயகிக்கு அடித்த ஜாக்பாட்!

நடிகை டாப்ஸி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை டாப்ஸி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். திரையுலகில் தற்போது பயோபிக் பீஃவர் அடிக்க துவங்கியுள்ளது. அதன்படி தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவுள்ளனர். இந்திய அணிக்காக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மித்தாலி ராஜ், ஒருநாள்
 

நடிகை டாப்ஸி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

நடிகை டாப்ஸி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

திரையுலகில் தற்போது பயோபிக் பீஃவர் அடிக்க துவங்கியுள்ளது. அதன்படி தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கவுள்ளனர். இந்திய அணிக்காக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மித்தாலி ராஜ்,  ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில் மித்தாலி ராஜின் வாழ்க்கை  வரலாற்று படத்தில் நடிக்க நடிகை டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கான திரைக்கதை தற்போது தயாராகிவரும் நிலையில் படத்திற்கான உரிமையை viacom18 motion pictures நிறுவனம் பெற்றுள்ளது.  

முன்னதாக நடிகை  டாப்ஸி இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான சூர்மாவில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.