×

மாஸ்டர் படத்தில் விஜயின் கேரக்டர் மற்றும் பெயர் இதுதானா? கசிந்த தகவல்!

மாஸ்டர் படத்தில் விஜய் ஒரு கல்லூரி ஆசிரியராக நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய் கழுத்தில் அணிந்திருக்கும் ஐடி கார்டில் அவரது பெயர் மற்றும் வேலை தெரிய வந்துள்ளது. 2020-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் மாஸ்டர் படத்திற்குத் தான் முதலிடம். அந்தளவிற்கு விஜயின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். சமீபத்தில் நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாதான் இப்போது வரை ட்ரெண்டிங். விஜய் ஆடிய நடனத்தை ஸ்டேட்டஸ் வைக்காதவர்கள் குறைவு
 

மாஸ்டர் படத்தில் விஜய் ஒரு கல்லூரி ஆசிரியராக நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய் கழுத்தில் அணிந்திருக்கும் ஐடி கார்டில் அவரது பெயர் மற்றும் வேலை தெரிய வந்துள்ளது.

2020-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் மாஸ்டர் படத்திற்குத் தான் முதலிடம். அந்தளவிற்கு விஜயின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். சமீபத்தில் நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாதான் இப்போது வரை ட்ரெண்டிங். விஜய் ஆடிய நடனத்தை ஸ்டேட்டஸ் வைக்காதவர்கள் குறைவு என்றே சொல்லலாம். 

மாஸ்டர் படத்தில் விஜய் ஒரு கல்லூரி ஆசிரியராக நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய் கழுத்தில் அணிந்திருக்கும் ஐடி கார்டில் அவரது பெயர் மற்றும் வேலை தெரிய வந்துள்ளது. அதில் அவரின் பெயர் ‘ஜான் துரைராமசாமி’ என்று இருக்கிறது. மேலும் அவர் ஜெயிண்ட் ஜெப்ரே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை பார்க்கிறார் என்பதும் உறுதியாகிறது. மாணவர்கள் நல அமைப்பின் முதல்வராக(Dean of students welfare Association) பொறுப்பில் இருக்கிறார் என்றும் தெரிகிறது. 

ஏற்கனவே மாஸ்டர் படம் சைலென்ஸ்டு என்ற கொரியன் படத்தின் காப்பி என்ற பேச்சு உலவி வந்தது. சைலென்ஸ்டு படத்தில் நாயகன் பள்ளி ஆசிரியராக பணிபுரிவர். மாஸ்டரில் விஜய் கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிகிறார். படம் வெளியான பின்பு தெரிந்துகொள்வோம் கதை என்னவென்று…!