×

மாமனார் vs மருமகன்: சூப்பர் ஸ்டார் படத்தில் தனுஷ்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாடி வருகிறார். புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு அடுத்த வாரம் ரஜினிகாந்த் நாடு திரும்புகிறார். சென்னை வந்ததும், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருக்கும் ‘பேட்ட’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில்
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாடி வருகிறார். புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு அடுத்த வாரம் ரஜினிகாந்த் நாடு திரும்புகிறார்.

சென்னை வந்ததும், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருக்கும் ‘பேட்ட’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும், அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படம் மட்டுமல்லாது, ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் மூலம் பிரபலமான இளம் இயக்குநர் ஹெச்.வினோத் தற்போது ‘பிங்க்’ ரீமேக்கான ‘தல 59’ படத்தை இயக்கவுள்ளார். இவரது இயக்கத்தில் ஒரு படத்திலும் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

கோடம்பாக்கம் வட்டாரத்தில் தீயாய் பரவியுள்ள இந்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை, ஆனால், ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசை தனக்கிருப்பதை தனுஷ் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால் இந்த தகவல் உண்மையாகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.