×

மாநாடு படத்தில் இணையும் எஸ்.ஜே. சூர்யா…அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்தார் நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்தார். அதற்காக வெளிநாடு சென்று கடும் பயற்சியெடுத்து தனது உடல் எடையைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு வந்தார் சிம்பு. இதையடுத்து மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாகப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடையப் பெரிய
 

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்தார்

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த ஆண்டு அறிவித்தார். அதற்காக வெளிநாடு சென்று கடும் பயற்சியெடுத்து தனது உடல் எடையைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு வந்தார் சிம்பு.

 இதையடுத்து மாநாடு திரைப்படம் கைவிடப்படுவதாகப்  படத்தின் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.  இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியடையப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் மாநாடு படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். 

 இந்த படத்தில் சிம்பு ஒரு முஸ்லீம் இளைஞராக நடிக்கிறார். அவருடைய  நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்  அவரது பிறந்தநாளான நேற்று  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ள   பிரபலங்கள் குறித்த தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

அதில் படத்தில் நடிகர் எஸ்.ஜே . சூர்யா, பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ், ஒய்.ஜி. மகேந்திரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா அருமையான கதை. என் நண்பர் சிம்புவுடன் இணைவது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.