×

மாநாடு திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்த பிரபல நடிகர்! 

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் சார்ந்த காமெடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ‘ராஷி கண்ணா’ ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ,இப்படத்தில் ஒரு
 

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது

சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அரசியல் சார்ந்த காமெடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக ‘ராஷி கண்ணா’ ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ,இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க இருப்பது கூறப்பட்டது.

இந்நிலையில் மாநாடு படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இதில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே சிம்புவுடன் இணைந்து  இது நம்ம ஆளு ,வாலு போன்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.