×

மலேசியாவில் வைரமுத்துவை எதிர்க்க கிளம்பிய இந்து அமைப்புகள். கண்டு கொள்ளாத மலேசிய அரசு!

மலேசிய நாட்டில் 30 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும்,அங்கு வசிக்கும்.தமிழர்கள், சர்தார்ஜிகள், சீனர்களுக்கு அவர்களது மத விழாக்களை நடத்த அனுமதிக்கிறது. சமீப காலமாக மலேசியாவில் ‘இந்து தர்ம பெருமன்றம்’ என்கிற பெயரில் ஒரு அமைப்பு துவங்கபட்டு,அர்ச்சகர் பயிற்சி, ஜோதிடம் , இந்து மத பிரசங்கம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ‘ தமிழராற்றுப்படை’ நூலை மலேசியாவின் தலைநகரில் உள்ள மலேசிய காங்கிரஸ் அரங்கில் வெளியிடுவதாக
 

மலேசிய நாட்டில் 30 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும்,அங்கு வசிக்கும்.தமிழர்கள், சர்தார்ஜிகள், சீனர்களுக்கு அவர்களது மத விழாக்களை நடத்த அனுமதிக்கிறது.

சமீப காலமாக மலேசியாவில் ‘இந்து தர்ம பெருமன்றம்’ என்கிற பெயரில் ஒரு அமைப்பு துவங்கபட்டு,அர்ச்சகர் பயிற்சி, ஜோதிடம் , இந்து மத பிரசங்கம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ‘ தமிழராற்றுப்படை’ நூலை மலேசியாவின் தலைநகரில் உள்ள மலேசிய காங்கிரஸ் அரங்கில் வெளியிடுவதாக முடிவு செய்திருந்தனர்.

மலேசியா பாராளுமன்ற சபாநாயகரான விக்னேஷ்வரன்,யோகேஸ்வரன் ஆகிய மலேசியா வாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வைரமுத்துவின் ‘ தமிழராற்றுப்படை’ நூலை மலேசிய காங்கிரசின் ‘ நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்’ அறங்கில் வெளியிட ஏற்பாடு செய்து இருந்தனர்.

மலேசிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின் சிறப்புப் பார்வையாளராகக் கலந்துகொண்டபோது நினைவுப்பரிசு வழங்கினார் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன். முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் உடனிருக்கிறார்.

இதை தடுக்க நினைத்த மலேசிய இந்து அமைபுகள் இந்த விழாவை நடத்தக் கூடாது என அரசிடம் கோரிக்கை வைத்தனர்.இதை ஹெச்.ராஜா போன்ற தமிழக இந்துத்துவ வாதிகள் தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ‘ தமிழக இந்துக்கள் போல அல்ல ,மலேசிய தமிழ் இந்துக்கள் வீரம் மிகுந்தவர்கள் என்று எழுதி பெருமைப் பட்டனர்.

ஆனால் இது எதையும்மே கண்டுகொள்ள வில்லை மலேசிய அரசு.
இன்று காலை திட்டமிட்டபடி விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
வழக்கம் போல உள்ளூர் இந்துத்துவ வாதிகளும்,ஓவர்சீஸ் இந்துத்துவ வாதிகளும் நாளை புது பிரட்சினை தேடிக் கிளம்பி விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.