×

மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட தடை!

தர்பார் திரைப்படத்தின் பிரீமியர் காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக தர்பார் திரைப்படத்தின் பிரீமியர் காட்சி அமெரிக்காவில் ஜனவரி
 

தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகவுள்ளது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக தர்பார் திரைப்படத்தின்   பிரீமியர்  காட்சி அமெரிக்காவில் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த படத்திற்குத் தடை விதிக்க கோரி மலேசியாவைச் சேர்ந்த டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில், 2.0 படத்தயாரிப்புக்காக லைகா நிறுவனம் தங்களிடம் பெற்ற கடனை வட்டியுடன் சேர்ந்து 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டி இருப்பதால், அதுவரை தர்பார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதையடுத்து இந்த மனு மீது பதில் அளிக்க லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வந்தது. அப்போது நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ரூ.23 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் படத்தை வெளியிடக்கூடாது என்று மலேசிய நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.4.9 கோடி டெபாசிட் தொகை செலுத்தும் வரை படத்தை வெளியிடக்கூடாது. அதேநேரம் லைகா நிறுவனம் டெபாசிட் தொகையைச் செலுத்தினால் தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடலாம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.