×

மருமகனுக்காக சிபாரிசு செய்த சூப்பர் ஸ்டார்!? 

விசாகன் தொழிலதிபர் என்பதையும் தாண்டி வஞ்சகர் உலகம் படத்தில் 3 பேரில் ஒருவராக நடித்திருந்தார். தற்போது சூப்பர் ஸ்டார்க்கு தனது மருமகனை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்று ஆசை சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருமகன் விசாகனுக்கு சிபாரிசு செய்து ஹீரோ வாக்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சௌந்தர்யா, அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படம்
 

விசாகன் தொழிலதிபர் என்பதையும் தாண்டி வஞ்சகர் உலகம் படத்தில் 3 பேரில் ஒருவராக  நடித்திருந்தார். தற்போது சூப்பர் ஸ்டார்க்கு தனது மருமகனை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்று ஆசை

சென்னை:  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருமகன் விசாகனுக்கு சிபாரிசு செய்து ஹீரோ வாக்கியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள்  சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும் நடிகருமான விசாகனுக்கும் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சௌந்தர்யா, அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படம் மற்றும், கணவர் குழந்தையோடு விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு, தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் விசாகன் தொழிலதிபர் என்பதையும் தாண்டி வஞ்சகர் உலகம் படத்தில் 3 பேரில் ஒருவராக  நடித்திருந்தார். தற்போது சூப்பர் ஸ்டார்க்கு தனது மருமகனை ஹீரோவாக பார்க்க வேண்டும் என்று ஆசை எழுந்துள்ளது. அதையொட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் தனது மருமகனை  ஹீரோவாக நடிக்க வைக்குமாறு சிபாரிசு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

மேலும் விசாகன் சிவப்பு ரோஜாக்கள் 2 படத்தில் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ஏழை மாணவியின் மருத்துவ கனவை நனவாக்கும் சிவகார்த்திகேயன்!