×

மனைவியுடன் பைக்கில் சென்று ஓட்டு போட்ட மாதவன்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் மாதவன் தனது மனைவியுடன் பைக்கில் சென்று ஓட்டுப்போட்டுள்ளார். சென்னை: நடிகர் மாதவன் தனது மனைவியுடன் பைக்கில் சென்று ஓட்டுப்போட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்து முடிந்தது. அதையடுத்து தற்போது நான்காம் கட்ட வாக்குப்பதிவாக இன்று மும்பை உள்ளிட்ட 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மும்பை வடக்கு,மும்பை வடகிழக்கு, மும்பை மத்திய வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை தெற்கு, மும்பை தெற்கு மத்திய தொகுதி உள்ளிட்ட தொகுதிகளிலும் படுமும்முரமாக
 

நடிகர் மாதவன் தனது மனைவியுடன் பைக்கில் சென்று ஓட்டுப்போட்டுள்ளார். 

சென்னை: நடிகர் மாதவன் தனது மனைவியுடன் பைக்கில் சென்று ஓட்டுப்போட்டுள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்து முடிந்தது. அதையடுத்து தற்போது நான்காம் கட்ட வாக்குப்பதிவாக இன்று மும்பை உள்ளிட்ட  9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மும்பை வடக்கு,மும்பை வடகிழக்கு, மும்பை மத்திய வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை தெற்கு, மும்பை தெற்கு மத்திய தொகுதி உள்ளிட்ட தொகுதிகளிலும் படுமும்முரமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் வசித்துவரும் பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் ஓட்டளித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் மற்றும் ஹிந்தி நடிகரான மாதவன் அவரது மனைவியுடன் bmw k1600 பைக்கில் சென்று வாக்களித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட  புகைப்படத்தைப் பகிர்ந்து அனைவரும் ஓட்டளியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.