×

மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளியான பிகில் டிரைலர்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அரசியல் வசனங்கள் எதுவும் இல்லை. ஆனால், மத்திய அரசுக்கு ஆதரவாக, ஏக், தோ, தீன் என்ற இந்தி பாட்டு பாடலை விஜய் இறுதியில் பாடுகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அரசியல் வசனங்கள் எதுவும் இல்லை. ஆனால், மத்திய அரசுக்கு ஆதரவாக, ஏக், தோ, தீன் என்ற இந்தி பாட்டு பாடலை விஜய் இறுதியில் பாடுகிறார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது
 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அரசியல் வசனங்கள் எதுவும் இல்லை. ஆனால்,  மத்திய அரசுக்கு ஆதரவாக,  ஏக், தோ, தீன் என்ற இந்தி பாட்டு பாடலை விஜய் இறுதியில் பாடுகிறார். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அரசியல் வசனங்கள் எதுவும் இல்லை. ஆனால்,  மத்திய அரசுக்கு ஆதரவாக,  ஏக், தோ, தீன் என்ற இந்தி பாட்டு பாடலை விஜய் இறுதியில் பாடுகிறார். 

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்தது. 

இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் படத்தில் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழக மற்றும் மத்திய அரசிற்கு எதிராக எந்த வசனங்களும் இடம்பெறவில்லை. மாறாக மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளது. பெண்களை கவுரவிக்கும் வகையிலும், கால்பந்து விளையாட்டை முன்னிலைப்படுத்தியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தெறி படத்தில் விஜய்யின் மாஸ் காட்சியான பபுல் கம் காட்சியை பிகில் படத்திலும் வைத்துள்ளார் இயக்குனர் அட்லி.

கத்திப் படத்தில் வரும் சண்டை காட்சிகளும், மெர்சலில் வரும் கையை உயர்த்தி காண்பிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக விஜய் ஏக், தோ, தீன் என்ற இந்தி பாடலை பாடுகிறார். இது மத்திய அரசின் இந்தி கொள்கைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளது. பிகில் ட்ரெய்லரை மாலை 6.30 மணி வரை 494 K ரசிகர்கள் பார்த்துள்ளனர்.