×

மதவெறி,சாதிவெறியை அடித்து நொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே! ஜிப்ஸியை பாராட்டிய கமல்ஹாசன்!!

குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார். குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார்.ஜோக்கர் படத்தில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்று கேட்டு மத்திய, மாநில அரசுகளை திக்குமுக்காடச் செய்தார் ராஜு முருகன். மதவெறி,
 

குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கியிருக்கும்  திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார்.

குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கியிருக்கும்  திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார்.ஜோக்கர் படத்தில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்று கேட்டு மத்திய, மாநில  அரசுகளை திக்குமுக்காடச் செய்தார் ராஜு முருகன்.
மதவெறி, சாதிவெறி, பதவி வெறிகளை ஆட்டம் காண வைக்கும் வகையில், அடுத்த படமான ஜிப்ஸியிலும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேசிய அளவில் சர்ச்சைக்குரிய பல பிரச்சினைகளை  கொண்டுள்ள  நிகழ்கால அரசியலை  தோலுரித்து காட்டியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான  இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  ஏற்கனவே இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட சில காட்சிகள் படம் வெளியாவதற்கு முன்பே படக்குழுவால் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில்நேற்று ஜிப்ஸி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் படக்குழுவினரை அழைத்து மிக அருமையாக திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், “மதவெறி,சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் #ஜிப்ஸி, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.