×

மணிரத்னம் படத்தில் அமலா பால் நடிக்கிறாரா? 

மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை அமலா பால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை: மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை அமலா பால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாக கருதப்படுவது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’.வரலாற்று மிக்க இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். எம்.ஜி.ஆர். தொடங்கி மணிரத்னம் வரை பலரும் அதை சினிமாவாக்க
 

மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை அமலா பால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: மணிரத்னம் இயக்க இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை அமலா பால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாக கருதப்படுவது  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’.வரலாற்று மிக்க இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். எம்.ஜி.ஆர். தொடங்கி மணிரத்னம் வரை பலரும் அதை சினிமாவாக்க முயன்று வருகின்றனர். 

அந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதில் தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்தும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களை வைத்தும்  ‘பொன்னியின் செல்வன்’படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம்.

இந்நிலையில் நடிகை அமலா பால் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இது சோழர் காலத்து கதை என்பதால் பழைய அரண்மனை செட், ஆடை ஆபரணங்கள், பல நடிகர்கள் என்று தயாரிப்பு செலவுகள் ஊயர்ந்துள்ளதாம். 

மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் செலவுகள் 800 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.