×

மங்காத்தா 2 எப்போது வெளியாகும்? இயக்குநர் வெங்கட் பிரபு ஓபன் டாக்!

சென்னை: மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. காவல்துறை அதிகாரியாக அஜித்தும், சிறப்பு புலனாய்வு அதிகாரியாக அர்ஜுனும் நடித்து அசத்தியிருந்தனர். நடிகை த்ரிஷா, ராய் லட்சுமி, வைபவ்,மகத் என பலர் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில்
 

சென்னை: மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.  

 

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில்   கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற  திரைப்படம் மங்காத்தா. காவல்துறை அதிகாரியாக அஜித்தும், சிறப்பு புலனாய்வு அதிகாரியாக அர்ஜுனும் நடித்து அசத்தியிருந்தனர். நடிகை த்ரிஷா, ராய் லட்சுமி, வைபவ்,மகத் என பலர் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில்  இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, ‘அஜித் ரசிகர்கள் கேட்க நினைக்கும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு அஜித் தான் பதில் சொல்ல வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அஜித்தின் கால்ஷீட் கிடைத்தவுடன் அதற்கான பணிகள் துவங்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.