×

மகள்களின் முன் எளிமையாக நடைபெற்ற வனிதாவின் மூன்றாவது திருமணம்!

நடிகர் விஜய் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திர லேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார். இவர்கள் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் சுற்றி திரிந்த நிலையில் ராபர்ட்டை கதாநாயகராக வைத்து எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தைத் தயாரித்தார். இந்த படம் சொல்லும் அளவிற்கு சரியாக ஓடவில்லை. இதையடுத்து இவர்கள் கருத்து
 

நடிகர் விஜய் நடித்து 1995 ஆம் ஆண்டு வெளியான சந்திர லேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்த பின் மூன்றாவதாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார். இவர்கள் ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் சுற்றி திரிந்த நிலையில் ராபர்ட்டை கதாநாயகராக வைத்து எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தைத் தயாரித்தார்.

இந்த படம் சொல்லும் அளவிற்கு சரியாக ஓடவில்லை. இதையடுத்து இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், சண்டைக்கு பெயர் போனவர் என்ற பெயர் எடுத்ததோடு, தனது தாய்மை உணர்வையும் வெளிப்படுத்தினார். தற்போது வனிதா தனது இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார். அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்தினார். தற்போது யூடியூப் பக்கம் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீட்டர் பால் என்பவரை வனிதா 3-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் வனிதாவின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. திருமணத்திற்கு முன்பாகவே தனது யூடியூப் சேனலில் லைவில் வந்து உரையாடினார். பீட்டர் பால் கிறிஸ்தவர் என்பதால், கிறிஸ்துவ முறைப்படி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பீட்டர்பால், வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின்னர் கேக் வெட்டி உற்சாகமாக திருமண கொண்டாட்டங்கள் அரங்கேறின. அம்மாவின் திருமணத்தை கண்டு மகள்கள் கண்கலங்கியபடி உற்சாகத்தில் திளைத்தனர்.