×

மகள் திருமணத்திற்கு நண்பனை நேரில் சென்று அழைத்த ரஜினி 

நடிகர் ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சென்னை: நடிகர் ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் சென்னையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில்
 

நடிகர் ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் சென்னையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மகளின் திருமணத்தை முன்னிட்டு ரஜினிகாந்த் சில முக்கிய நபர்களை நேரில் சென்று அழைப்பு விடுத்துவருகிறார் அந்த வகையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், இசையமைப்பாளர் இளைய ராஜா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூா் ராஜூ உள்ளிட்டோரை ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தியின் நெருங்கிய நண்பரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை நேற்று மாலை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்து  ரஜினிகாந்த் தனது மகளின் திருமணப் பத்திரிக்கையை கொடுத்து அழைப்பு விடுத்தார்.