×

மகனுக்கு போட்டியாக மீண்டும் ஹீரோவாகும் நடிகர் கார்த்திக்

பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது.இப்படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய அலிமிர்சாக் இசையமைத்துள்ளார். 80-90 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் நடிகர் கார்த்திக். தனது துள்ளல் நடிப்பு, ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என பட்டையை கிளப்பும் இவர் நவரச நாயகன் என்று அழைக்கப்பட்டார். சினிமா டூ அரசியல் என படுபிஸியாக இருந்த இவர், தனுஷுடன் அனேகன், விக்ரமின் இராவணன், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது இவரது
 

பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, கோவை போன்ற  பகுதிகளில் நடைபெற உள்ளது.இப்படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய அலிமிர்சாக் இசையமைத்துள்ளார். 

80-90 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் நடிகர் கார்த்திக். தனது துள்ளல் நடிப்பு, ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என பட்டையை கிளப்பும் இவர்  நவரச நாயகன் என்று  அழைக்கப்பட்டார்.  சினிமா டூ  அரசியல் என படுபிஸியாக இருந்த இவர், தனுஷுடன் அனேகன், விக்ரமின் இராவணன், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது இவரது மகன் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவருக்கு போட்டியாக கார்த்திக் மீண்டும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். 

 ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கிய  டி.எம் ஜெயமுருகன் இயக்கும் ‘தீ இவன்’ படத்தில் கார்த்திக் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.  இதில்  சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,  ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குநர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு  டி.எம் ஜெயமுருகனே கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இப்படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய அலிமிர்சாக் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் இப்படம் குறித்து கூறியுள்ள படத்தின் இயக்குநர்,  இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. அண்ணன் தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். என் தங்கை, பாசமலர்,  முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும்.   விவசாயத்தை வாழ்க்கையாகவும் தன்மானத்தை உயிராகவும் கொண்ட அண்ணனுக்கும், அண்ணனுக்காக வாழ்வையே தியாகம் செய்யும் தங்கைக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் படத்தின் மையக் கரு’ என்றார். 

‘ தீ இவன்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் படப்பிடிப்பு  பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, கோவை போன்ற  பகுதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.