×

பொள்ளாச்சியில் இந்தியன் 2

நடிகர் கமல் ஹாசன் பொள்ளாச்சியில் இந்தியன் 2 திரைப்பட ஷூட்டிங்கின் போது மக்களை சந்தித்து பேசியுள்ளார் பொள்ளாச்சி: நடிகர் கமல் ஹாசன் பொள்ளாச்சியில் இந்தியன் 2 திரைப்பட ஷூட்டிங்கின் போது மக்களை சந்தித்து பேசியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தில் இடையே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலேயும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியில் நடந்த படப்பிடிப்பில் இந்தியன் தாத்தா வேடத்தின் மிக முக்கிய பகுதியாக, அரசு அலுவலகத்தில்
 

நடிகர் கமல் ஹாசன் பொள்ளாச்சியில் இந்தியன் 2 திரைப்பட ஷூட்டிங்கின் போது மக்களை சந்தித்து பேசியுள்ளார்

பொள்ளாச்சி: நடிகர் கமல் ஹாசன் பொள்ளாச்சியில் இந்தியன் 2 திரைப்பட ஷூட்டிங்கின் போது மக்களை சந்தித்து பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தில் இடையே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலேயும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியில் நடந்த படப்பிடிப்பில் இந்தியன் தாத்தா வேடத்தின் மிக முக்கிய பகுதியாக, அரசு அலுவலகத்தில் இருக்கும் கமலை கிராமத்து மனிதர்கள் சிலர் வந்து சந்தித்து பேசுவது போன்ற காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். 

அதன் பிறகு அந்த ஊரில் இருந்த மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளோடு பேசி மறுநாள் மக்களை சந்தித்து குறைகளையும் கேட்டிருக்கிறார். இந்த பிஸி செட்யூலிலும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார். மதுரை சின்னப்புள்ள, ட்ரம்ஸ் சிவமணி, ஆகியோருக்கு வாழ்த்து சொன்ன கமல் நர்த்தகி நடராஜூக்கு வாழ்த்து சொல்லும் போது “எனது சகோதரி நர்த்தகி நடராஜூக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு வாழ்த்தியிருக்கிறார்.