×

பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய பெண்கள் மீதும் தவறு இருக்கிறது : இயக்குநர் பாக்யராஜ் கருத்து !

பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில ஆண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே நடுங்க வைத்தது. இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த குமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் சபரி ராஜன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது. சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆவணங்கள் தெளிவாக இல்லாததால், அவர்கள் மீது போடப்பட்ட குண்டர்
 

பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில ஆண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே நடுங்க வைத்தது. இந்த வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த குமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் சபரி ராஜன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது.

சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான ஆவணங்கள் தெளிவாக இல்லாததால், அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தைச்  சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அவர்களின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்குப் பல பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ் பொள்ளாச்சி வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருத்துக்களைப் பதிவுசெய்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பாக்யராஜ், பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில ஆண்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் அந்த இளைஞர்கள் மட்டும் தவறு செய்யவில்லை, அதில் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் தவறு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி வன்கொடுமைக்குத் தமிழகமே எதிர்ப்பு தெரிவித்து  வருகையில், பாக்யராஜ் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.