×

பொன்னியின் செல்வன் அப்டேட்: ஒரே நேரத்தில் இரண்டு பாகம்…தாய்லாந்து பறக்கும் படக்குழு!

அழகாகவும் அதே சமயம் சில கற்பனை ஊற்றுகளை பொதிக்கும் வண்ணமும் அமையப் பெற்றுள்ள இந்த நாவலில், 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருக்கும். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாகக் கருதப்படும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகப் படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். சோழ சாம்ராஜ்யத்தின் ஆட்சியை அழகாகவும் அதே சமயம் சில கற்பனை ஊற்றுகளை பொதிக்கும்
 

அழகாகவும் அதே சமயம் சில கற்பனை ஊற்றுகளை பொதிக்கும் வண்ணமும் அமையப் பெற்றுள்ள இந்த நாவலில், 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்  இடம் பெற்றிருக்கும்.  

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. 

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாகக் கருதப்படும்  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகப் படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். சோழ சாம்ராஜ்யத்தின் ஆட்சியை அழகாகவும் அதே சமயம் சில கற்பனை ஊற்றுகளை பொதிக்கும் வண்ணமும் அமையப் பெற்றுள்ள இந்த நாவலில், 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்  இடம் பெற்றிருக்கும்.  

அதில் முக்கியமாகக் குந்தவை,  வந்தியத் தேவன், பழுவேட்டரையர், பூங்குழலி, ஆழ்வார்கடியான்,  நந்தினி உள்பட கதாபாத்திரங்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் , விக்ரம், அமிதாப்  பச்சன், நடிகர் அஸ்வின்  என பலரும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். 

இந்நிலையில்    பொன்னியின் செல்வன்  படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் தொடங்கியது. இதையடுத்து அடுத்ததாகப் படக்குழு  தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார்கள். தாய்லாந்து காடுகளில்  45 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. அதை முடித்துக் கொண்டு ஒரு வார  இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வட  இந்தியாவில்  படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். இத்தனை  வேகமாக படப்பிடிப்பு நடக்க காரணம், மணிரத்னம் படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றாக எடுத்து வருவதேயாகும்.  இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.