×

பொது இடத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் முதுகில் உதைத்த மர்ம நபர்! வைரலாகும் வீடியோ!

அப்போது இந்த நிகழ்ச்சி குறித்து அதிகாரிகள் சிலரிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது திடீரென அர்னால்டின் முதுகில் ஒருவர் பலமாக உதைத்தார். சென்னை: ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் முதுகில் உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்கள் கொடுத்து உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருப்பவர் அர்னால்ட். இவர் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ‘அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்த
 

அப்போது இந்த நிகழ்ச்சி குறித்து அதிகாரிகள் சிலரிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது திடீரென அர்னால்டின் முதுகில் ஒருவர் பலமாக உதைத்தார்.

சென்னை: ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் முதுகில் உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

கமாண்டோ, பிரிடேட்டர், டெர்மினேட்டர் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்கள் கொடுத்து உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்திருப்பவர் அர்னால்ட். இவர் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ‘அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அப்போது இந்த நிகழ்ச்சி குறித்து அதிகாரிகள் சிலரிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது திடீரென அர்னால்டின் முதுகில் ஒருவர் பலமாக உதைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அர்னால்டும் அவரது பாதுகாவலர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 

உடனே அந்த நபரை அர்னால்டின் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அர்னால்டை முதுகில் தாக்கிய நபர் யார்? எதற்காக தாக்கினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.