பொண்டாட்டி புள்ளைங்கள விட்டுட்டு தனியாக தர்பாருக்கு வந்த தனுஷ்…வைரல் போட்டோஸ்!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினி போலீஸாக நடித்துள்ள இப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றுள்ளது.
தர்பார் படத்தின் சிறப்பு காட்சியைக் காண ரஜினிகாந்த் குடும்பத்தினர் நேற்று அதிகாலையிலேயே ரோஹிணி தியேட்டருக்கு படையெடுத்தனர். லதா ரஜினிகாந்த், மகள்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், மருமகன் விசாகன், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். ஆனால் தனுஷ் வரவில்லை.
இந்நிலையில் நடிகர் தனுஷ் நேற்றிரவு ராம் சினிமாஸில் தர்பார் படத்தைக் கண்டுகளித்துள்ளார். இதை தியேட்டர் நிர்வாகம் உறுதிசெய்துள்ளதோடு தனுஷின் புகைப்படங்களையும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.