×

‘பேட்ட’ ரிலீஸ் எப்போ தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.10ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.10ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ்,
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.10ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.10ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினி, சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். மல்டி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ படத்திற்கு முதன் முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஊட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் டேராடூன், டார்ஜிலிங், சென்னை, லடாக், ஐரோப்பா, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார். திட்டமிட்டதைவிட 15 நாட்களுக்கு முன்கூட்டியே ‘பேட்ட’ ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை பொங்கல் பண்டிகையின் விடுமுறையை டார்கெட் செய்து வரும் ஜன.10ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.