×

பேட்ட தியேட்டரில் ரசிகருக்கு டும் டும் டும்

உட்லண்ட்ஸ் தியேட்டரில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: உட்லண்ட்ஸ் தியேட்டரில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் இன்று வெளியானது. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரைப்படம் மிக
 

உட்லண்ட்ஸ் தியேட்டரில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: உட்லண்ட்ஸ் தியேட்டரில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் இன்று வெளியானது. மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரைப்படம் மிக சிறப்பாக இருப்பதாக வும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் பேட்ட திரைப்படம் வெளியான சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரஜினி ரசிகர் அன்பரசு என்பவர் திருமணம் செய்துகொண்டார். திரையரங்குக்கு வெளியே மேடை அமைத்து, ஐயர் வரவழைக்கப்பட்டு, உறவினர்கள் முன்னிலையில் . திருமணம் செய்து கொண்ட அன்பரசு – காமாட்சி ஜோடியை ரஜினி ரசிகர்கள் வாழ்த்தி பரிசு பொருட்களும் சீதனமும் தந்தனர்.